ரிலீஸுக்கு ரெடியாகும் தேசிய விருதுப்படம்!

பிரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கத்தில் உருவாகி, தேசிய விருதை வென்ற ‘பாரம்’ படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

செய்திகள் 28-Jan-2020 4:06 PM IST Chandru கருத்துக்கள்

ரெக்லஸ் ரோசஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாரம்’ கடந்த வருடத்தின் சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருதை வென்று அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. வயதான பெற்றோர்களை உடன் வைத்துக்கொள்வதை பாராமாக நினைக்கும் இன்றைய பிள்ளைகளின் மனோநிலையை மைய வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தேசிய விருதை வென்றிருப்பதன் மூலம், 65 வருட தேசிய விருது வரலாற்றில் முதல்முறையாக பெண் இயக்குனர் ஒருவர் இயக்கியுள்ள தமிழ்ப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்.ராஜு, சுகுமார் சண்முகம், எஸ்.பி.முத்துக்குமார், ஜெயலக்ஷ்மி, ஸ்டெல்லா கோபி உட்பட பலர் நடித்துள்ள இப்படம் எப்போது வெளியாகும் என்ற் கேள்வி தமிழ்த்திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தது. தற்போது அப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் ‘கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி’ இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளதாம்.

#GrassrootFilmCompany #Vetrimaaran #NationalAward #Baaram #PriyaKrishnaswamy #RecklessRoses #BaaramFromFeb21st

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;