தமிழ் சினிமாவில் அவ்வப்போது பெண் இயக்குனர்களின் படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், பெரிய அளவில் யாரும் கவனம் ஈர்க்கவில்லை. அந்த வகையில் தனது ‘பூவரம் பீப்பி’ படத்தின் மூலம் இயக்குனரான ஹலிதா சலீம் தனது இரண்டாவது படமான ‘சில்லுக்கருப்பட்டி’ மூலம் பரவலாக பேசப்பட்டு வருகிறார். அப்படத்தின் தாக்கமே இன்னும் ஓயாத சூழ்நிலையில், தற்போது தனது அடுத்த படமான ‘ஏலே’வின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை அவர் மேற்கொண்டிருக்கும் செய்தியில் கோலிவுட் புருவம் உயர்த்தியுள்ளது.
புஷ்கர் - காயத்ரியின் ‘ஏ வால்வாட்ச்சர் ஃபிலிம்’ தயாரிப்பில் ஒய்நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த ‘ஏலே’ படத்தின் ஷூட்டிங் வேலைகள் ஏற்கெனவே நிறைவு பெற்றுவிட்டனவாம். இப்படத்தில் சமுத்திரக்கனி அப்பாவாக நடிக்க, அவரின் மகனாக வசனகர்த்தா ‘மணிகண்டன்’ நடிக்கிறாராம். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், ‘அருவி’ புகழ் ரேமெனட் டெரிக் க்ராஸ்டா எடிட்டிங்கில் உருவாகும் இப்படத்திற்கு கபெர் வாசுகி இசையமைக்கிறார். வினோத் ராஜ்குமார் கலை இயக்கம் செய்கிறார்.
#Aelay #Samuthirakani #PushkarGayathri #YNotStudios #RelianceEntertainment #Sashikanth #HalithaShameem #WallWatcherFilms
‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் படம்...
’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து சென்ற...
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...