சூர்யா தரவிருக்கும் காதலர் தின பரிசு!

காதலர் தினத்தில் வெளியாகிறது ‘சூரரைப் போற்று’ படத்தின் அழகான காதல் பாடல்!

செய்திகள் 28-Jan-2020 2:32 PM IST VRC கருத்துக்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீஸர் மற்றும் ‘மாரா… ’ என்று துவங்கும் தீம் சாங் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கேரள விநியோக வியாபாரமும் முடிவடைந்துள்ளது என்ற தகவலை பதிவு செய்திருந்தோம். இப்போது இப்படம் குறித்த மற்றொரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை இந்த படத்திற்கு இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதாவது ரசிகர்கள் அதிலும் குறிப்பாக சூர்யாவின் ரசிகரகளுக்கு காதலர் தின பரிசாக இப்படத்தின் அழகிய காதல் பாடல் ஒன்றை காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிட உள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்து அடிக்கடி அப்டேட் தரும் ஜி.வி.பிரகாஷ் தந்துள்ள இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்யும் என்பது நிச்சயம்!

சூர்யாவின் ‘2D ENTERTAINMENT’ நிறுவனமும் ‘Sikhya Entertainment’ என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், பரேஷ் ராவல், ஊர்வசி உட்பட பலர் நடித்துள்ளனர்.

#2DEntertainment #SooraraiPottru #Suriya #SudhaKongara #SikhyaEntertainment #GVPrakashKumar #AparnaBalamurali #LoveSongFromSooraraiPottruOnValentinesDay

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;