சர்வர் சுந்தரம் V/S டகால்டி

சந்தானம் நடிக்கும் சர்வர் சுந்தரம், டகால்டி ஆகிய இரண்டு படங்களும் இம்மாதம்  31-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 28-Jan-2020 2:09 PM IST VRC கருத்துக்கள்

இந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 2 படங்கள் வெளியாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பொதுவாக ஒரு ஹீரோ நடித்த 2 படங்கள் ஒரே நாளில் ரிலீசாவதில்லை. அனால் சந்தானம் கதையின் நாயகனாக நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’, ‘டகால்டி’ ஆகிய படங்களை இந்த வாரம் ரிலீஸ் செய்வதற்கான விளம்பர, புரொமோஷன் வேலைகளில் இந்த இரண்டு படக்குழுவினரும் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றனர்.

‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவி சாண்டில்யா கதையின் நாயகியாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் இது! இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து பல ரிலீஸ் தேதிகள் குறிக்கப்பட்டும் ஒரு சில பிரச்சனைகளால் அந்த தேதிகளில் இப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்ட நிலையில் சந்தானம் நடிக்கும் ‘டகால்டி’ படத்தையும் இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் சென்னையிலுள்ள ஃபோனிக்ஸ் மாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி பேசும்போது, ‘‘சர்வர் சுந்தரம்’ என்றதும் நம் நினைவுக்கு வருவது மறைந்த நடிகர் நாகேஷ் அவர்கள் தான்! அவர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘சர்வர் சுந்தரம்’. அந்த டைட்டிலில் மீண்டும் உருவாகியுள்ள இந்த ‘சர்வர் சுந்தரம்’ படத்தை அவரது நினைவு நாளான ஜனவரி 31-ஆம் தேதி நிச்சயமாக ரிலீஸ் செய்வோம்’’ என்று கூறினார். அதனால் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருக்கின்றனர் இப்படக் குழுவினர்!

‘சர்வர் சுந்தரம்’ பட விஷயம் இப்படி இருக்க, இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘டகால்டி’ படத்தின் தயாரிப்பாளரும் ‘டகால்டி’ படத்தை திட்டமிட்டபடி 31-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘18 ரீல்ஸ்’ நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்ந்த விநியோகஸ்தர் எஸ்.பி. சௌத்ரி தயாரித்துள்ள படம் ‘டகால்டி’. இந்த படத்தில் சந்தானத்துடன் வங்காள நடிகை ரித்திகா சென், யோகி பாபு, தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம், ரேகா, ராதாரவி, ஹேமந்த் பாண்டே உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தானமும் ‘யோகி’ பாபுவும் முதன் முதலாக இணைந்து நடித்துள்ள படம், சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம், இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் இயக்கும் படம் என்று இப்படத்தின் மீதும் பரவலாக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பின்னணி பாடகர் விஜய் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தையும் திட்டமிட்டபடி 31-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறோம் என்று இப்படக்குழுவினரும் அறிவித்திருப்பதால் ‘சர்வர் சுந்தரம்’, ‘டகால்டி’ இந்த இரண்டு படங்களும் இம்மாதம் 31-ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

#Santhanam #Dagaalty #ServerSundaram #DagaaltyFromJan31st #ServerSundaramFrom31st #RittikaSen #YogiBabu #Radharavi #Rekha #VijayNarain #MadhanKarky #18Reels #SPChowdhary #SanthoshNarayanan #AnandBalki #RMadhi #KenanyaFilms #MiraacleMovies

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;