விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா லோகேஷ்கனகராஜ்?

விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்து  ரஜினியை இயக்குகிறார்!

செய்திகள் 27-Jan-2020 4:23 PM IST Top 10 கருத்துக்கள்

மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீசாகி விடும். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர் நேஷனல்’ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இப்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி இந்த படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் இணைய உள்ளார். இதன் மூலம் ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தை தொடர்ந்து ரஜினியை இயக்குவது யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. கமல்ஹாசன் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க இருக்கும் இந்த படத்தில் கம்லஹாசனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுவதோடு இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#KamalHaasan #Ulaganaayagan #LokeshKanagaraj #Maanagaram #Kaithi #Thalapathy64 #Master #RaajKamalFilmsInternational #Vijay #Karthi #Rajinikanth #Superstar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;