8 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கும் படம்!

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தாராளபிரபு’ படத்தில் 8 இசை அமைப்பாளர்கள் பணி புரிகிறார்கள்!

செய்திகள் 27-Jan-2020 11:42 AM IST Top 10 கருத்துக்கள்

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘தாராள பிரபு’. ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘விக்கி டோனர்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அறிமுக இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி வரும் இப்படத்தில் 8 இசை அமைப்பாளர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அனிருத், விவேக் மெர்வின், ஊர்கா, பரத்சுந்தர், ஷான் ரோல்டன், கபீர் வாசுகி, மேட்லி ப்ளூஸ், இனோ கங்கா என 8 இசை அமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்கள். இந்த படத்தில் ஹரீஷ் கல்யாணுடன் தன்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஒரு முக்கியமான கேரக்டரில் விவேக்கும் நடிக்கிறார். ‘ஸ்கிரீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணியை செல்வகுமார் கவனிக்கிறார். இந்த படம் தவிர ஹரீஷ் கல்யாண் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ‘பெல்லி சூப்புலு’ படத்தின் ரீ-மேக்கிலும் நடிக்கிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.

#DharalaPrabhu #VivekMervin #SeanRoldan #Oorka #BharathSundar #KaberVasuki #MadleyBlues #Innogenga #AnirudhRavichander #HarishKalyan #TanyaHope #Vivekh #ScreenSceneMediaEntertainmentPvtLtd #KrishnaMarimuthu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;