சந்தானத்தின் 2 படங்களுடன் களம் இறங்கும் சசிக்குமார் படம்!

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார், அஞ்சலி நடிக்கும்  நாடோடிகள்-2 ஜனவரி 31-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 25-Jan-2020 4:24 PM IST Top 10 கருத்துக்கள்

இரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய சமுத்திரக்கனியே இரண்டாம் பாகத்தையும் இயக்க, இப்படத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம் உட்பட பலர் நடித்துள்ளனர். ‘மெட்ராஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிற தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சந்தானம் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘டகால்டி’ ஆகிய இரண்டு படங்கள் இதே ரிலீஸ் தேதியை குறித்திருக்கும் நிலையில் இப்போது சமுதிரக்கனி, சசிகுமார் கூட்டணியின் ‘நாடோடிகள்-2’ படமும் அதே நாளில் களம் இறங்க இருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை என்.கே.ஏகாம்பரம் கவனித்துள்ளார்.
#Sasikumar #Samuthirakani #Nadodigal #Nadodigal2 #Anjali #AthulyaRavi #MadrasEnterprises #JustinPrabhakaran #Nadodigal2FromJanuary31st

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;