டாணா – விமர்சனம்

போலீஸ் பாரம்பரியத்தை காக்க போராடும் இளைஞனின் கதை!

விமர்சனம் 25-Jan-2020 4:18 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Yuvraj Subramani
Production: Nobel Movies
Cast: Vaibhav, Nandita Swetha, Yogi Babu & Pandiyarajan
Music: Vishal Chandrasekhar
Cinematography: Siva G R N
Editor: G K Prasanna

யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா, பாண்டியராஜன் ஹரீஷ் பேரடி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாணா’ எப்படிப்பட்ட படமாக அமைந்துள்ளது?

கதைக்களம்

பரம்பரை பரம்பரையாக போலீஸ் வேலையில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்து வரும் குடும்பத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் குள்ளமாக இருப்பதால் போலீஸ் வேலைக்கு தேர்வாகாமல் போக, குடும்ப பாரம்பர்யத்தை காக்க முடியாமல் போகிறது. அதனால் அடுத்த தலைமுறையாக தனது மகன் வைபவை போலீசாக்க முயற்சி செய்கிறார் பாண்டியராஜன். வைபவுக்கு போலீஸ் வேலையில் சேருவதற்கான அனைத்து தகுதிகள் இருந்தாலும், வைபவுக்கு உணர்ச்சி வசப்படும்போது வரும் ‘பெண் குரல்’ பிரச்சனையால் அவரை போலீஸ் வேலையில் சேர விடாமல் தடுக்கிறார் உயர் போலீஸ் அதிகாரியான ஹரீஷ் பேரடி! இதனால் ஆத்திரமுறும் வைபவ், எப்படி ஹரீஷ் பேரடியின் மோசடிகளை கண்டு பிடித்து அவரை போலீஸ் பதவியில் இறக்கிவிட்டு, தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய போலீஸ் வேலையை பெறுகிறார் என்பதே ‘டாணா’வின் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்

‘சிக்சர்’ படத்தில் 6 மணிக்கு மேல் கண் தெரியாதவராக நடித்த வைபைவை இப்படத்தில் உணர்ச்சிவசப்படும்போது பெண் குரலில் பேசுபவராக நடிக்க வைத்து இப்படத்தை இயக்கிய யுவராஜ் சுப்பிரமணி, பாரம்பரிய டாணா குடும்பம், லோன் வசூல், திட்டமிட்டு சொத்தை அபகரிப்பது என்று பல்வேறு விஷயங்களை வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைத்துள்ளார். அதில் எந்த விஷயத்தை மையப்படுத்தி கதையை நகர்த்துவது என்பதில் நிறையவே தடுமாறியிருக்கிறார் இயக்குனர்.

மகனை போலீஸ் வேலையில் சேரக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் பாண்டியராஜனுக்கும் மகன் வைபவுக்கும் இடையிலான காட்சிகளில் வலுவில்லை. அதைப் போல வைபவ், நந்திதாவுக்கு இடையில் உருவாகும் காதல் அதனை தொடர்ந்துள்ள காட்சிகள், லோன் வசூலிப்பவராக வரும் யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆகியவற்றில் சுவாரஸ்யம் இல்லை! ‘உணர்ச்சி வசப்படும்போது பெண் குரல் வருவது’ என்ற புதிய விஷயத்தை கையிலெடுத்த இயக்குனர் அதை மையப்படுத்தி கதையை நகர்த்தியிருந்தால் ‘டாணா’ ஓரளவுக்கு கவனம் பெறும் படமாக அமைந்திருக்கும். டெக்னிக்கல் விஷயங்களை பொறுத்தவரையில் விஷால் சந்திரசேகரின் இசை, சிவாவின் ஒளிப்பதிவு, ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பு ஆகிய விஷயங்கள் கதைக்கு தேவையான பங்களிப்பு செய்திருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

வைபவை பொறுத்த வரை தனது கேரக்டருக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளார்! ஆனால் எமோஷன் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் வைபவ்! நந்திதாவுக்கு படத்தில் பெரிய வேலை இல்லை. இருந்தாலும் தனது வழக்கமான நடிப்பில் கவர்கிறார் நந்திதா! இந்த படத்தை பொறுத்தவரையில் ‘யோகி’ பாபுவின் காமெடி சொல்லும்படியாக கவனத்தை ஈரக்கவில்லை. வைபவின் தந்தையாக வரும் பாண்டியராஜ், போலீஸ் அதிகாரியாக வரும் ஹரீஷ் பேரடி, வைபவின் அம்மாவாக வரும் உமா பத்மநாபன் மற்றும் கலைராணி வேலா ராமமூர்த்தி பசங்க சிவகுமார் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது கேரக்டர்களுக்கு தேவையான பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

பலம்

1.உணர்ச்சிவசப்படும்போது பெண் குரல் வரும் விஷயம்!

2.டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. தொடர்பில்லாமல் வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் திரைக்கதை

2. கதைக்கு தேவையில்லாமல் வரும் சில கேர்கடர்கள்….

மொத்தத்தில்…

‘உணர்ச்சிவசப்படும்போது வரும் பெண் குரல்’ என்ற ஒரு விஷயத்தை தவிர இப்படத்தில் சொல்லும்படியாக எந்த சுவாரஸ்ய விஷயங்களும் இல்லை. அதனால் இப்படம் பத்தோடு பதினொன்று என்ற வகையிலேயே அமைந்துள்ளது!

ஒருவரி பஞ்ச் : போலீஸ் பாரம்பரியத்தை காக்க போராடும் இளைஞனின் கதை!

ரேட்டிங் : 4/10

#Taana #TaanaMovieReview #Vaibhav #NanditaSwetha #SandraAmy #VishalChandrasekhar #YogiBabu #Pandiyarajan #NobelMovies #GKPrasanna #SivaGRN

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;