‘துருவங்கள் பதினாறு’படப்புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கும் படம் ‘மாஃபியா’. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தையும் குறுகிய நாட்களில் முடித்தார் இயக்குனர் கார்த்திக் நரேன். இதனை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வந்த இப்படத்தின் அனைத்து வேலைகளும் இப்போது முடிவடைந்து விட்டது என்று கூறப்படுகிற்து. இந்நிலையில் இந்த படத்தை ஃபிப்ரவரி 21-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கும் அதிகாரபூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதே தினம் பாரதிராஜா இயக்கி நடித்துள்ள ‘மீண்டும் ஒரு மரியாதை’ படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நரகாசூரன்’ இன்னும் ரிலீசாகாத நிலையில் அவரது இரண்டாவது படமாக ‘மாஃபியா’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவை கோகுல் பினாய் கவனித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார்.
#KarthickNaren #LycaProductions #Mafia #ArunVijay #GokulBenoy #JakesBenoy #PriyaBhavaniShankar #MafiaFomFeb21st #MafiaChapter1
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்...