பாலா படத்துக்காக எடையைக் கூட்டிய ஆர்.கே.சுரேஷ்!

‘ஜோசஃப்’ ரீ-மேக்கிற்காக 22 கிலோ எடையை கூட்டிய ஆர்.கே.சுரேஷ்!

செய்திகள் 25-Jan-2020 12:40 PM IST Top 10 கருத்துக்கள்

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஜோசஃப்’. பத்மகுமார் இயக்கத்தில், ஜோஜு ஜார்ஜ் கதையின் நாயகனாக நடித்த இந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்யும் உரிமையை ஆர்.கே.சுரேஷ் வாங்கியுள்ளார் என்றும் இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்க, இந்த படத்தை இயக்குனர் பாலாவின் ‘B STUDIOS’ நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அதிகாரபூர்வ தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். மலையாள ‘ஜோசஃப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இப்படத்தை இயக்க ஆர்.கே.சுரேஷ் இப்படத்தில் இரண்டு கெட்-அப்களில் தோன்றி நடிக்க உள்ளார் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்திற்காக ஆர்.கே.சுரேஷ் தனது எடையை கணிசமாக கூட்டி உள்ளார். 73 கிலோ எடை இருந்த ஆர்.கே.சுரேஷ் இப்போது 95 கிலோ எடையாக உயர்த்தி உள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்களை எடுத்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆர்.கே.சுரேஷ். அந்த புகைப்படங்களுடன் ‘இந்த எடை மாற்றம் பாலா சார் படத்திற்காக...’ என்றும் படதிவு செய்துள்ளார் ஆர்.கே.சுரேஷ். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் துவங்க இருக்கிறது என்பது தெரிய வருகிறது.

#RKSuresh #JojuGeorge #MPadmakumar #VStudios #Bala #NationalAwardWinningActor

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;