‘கெட்டவன்’ பட இயக்குனரின் ‘டே நைட்’

10 லட்சம் ரூபாய் செல்வில் ஆஸ்திரேலியாவில் படமான படம் ‘டே நைட்’

செய்திகள் 24-Jan-2020 1:10 PM IST Top 10 கருத்துக்கள்

சிம்புவை வைத்து ‘கெட்டவன்’ படத்தை இயக்கிய ஜி.டி.நந்து ‘N.K.KANDI’ என்ற பெயரில் இயக்கியிருக்கும் படம் ‘டே நைட்’. இந்த படத்தில் ஆஸ்திரேலியா வாழ் தமிழர் ஆதர்ஷ் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் கதாநாயகியாக நடிக்க, இப்படம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாகியுள்ளது. ‘ஆத்விக் விஷுவல்’ மீடியா நிறுவனம் சார்பாக இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் இயக்குனர் N.K.கண்டி பேசும்போது,

‘‘காதல் புனிதமானது. அதே நேரம் காதல் கொடூரமானதும் கூட’ இதுதான் டே நைட் படத்தின் ஒன் லைன். அதை வைத்து க்ரைம் த்ரில்லர் படமாக எடுத்துள்ள படம் தான் ‘டே நைட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு என்றதும் கோடிக்கணக்கில் செலவு செய்து இப்படத்தை எடுத்திருப்பதாக நினைக்க வேண்டாம். வெறும் பத்து லட்சம் ரூபாய் செலவில் இப்படத்தை எடுத்துள்ளோம். பெருபாலும் பாடல் காட்சிகளை படமாக்க ஆஸ்திரேலியா நாட்டுக்கு செல்வார்கள்! ஆனால் நாங்கள் மொத்த படத்தையும் ஆஸ்திரேலியாவில் இதுவரை யாரும் படம் பிடிக்காத சில இடங்களில் கூட இப்படத்தின் காட்சிகளை படமாக்கியுள்ளோம். இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து, இப்படத்தை தயாரித்திருக்கும் ஆதர்ஷ் அதற்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளார். அதற்கான பலன் அவருக்கு கிடைக்கும்’’ என்று சொன்ன இயக்குனர் N.K.கண்டி, ‘‘கிட்டத்தட்ட மூன்றரை கோடி ரூபாய் செலவு செய்த ‘கெட்டவன்’ படம் டிராப் ஆனதும் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த படத்திற்கு பத்திரிகையாளர்களாகிய நீங்கள் எல்லோரும் சப்போர்ட் தருவீர்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.

#DayKnight #NKKandi #Adharsh #AdhvikVisualMedia #Kettavan #STR

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;