கவர்ச்சி படம் - வேண்டுகோள் விடுத்த சோனா!

‘பச்ச மாங்கா’ படத்தில் கவர்ச்சியாக நடிக்கவில்லை – நடிகை சோனா விளக்கம்!

செய்திகள் 23-Jan-2020 1:11 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் படங்கள மற்றும் ஒரு சில மலையாள., தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் சோனா! இவர் ‘பச்ச மாங்கா’ என்ற மலையாள படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிரார். இந்த படத்தில் மற்றொரு முக்கியமான பாத்திரத்தில் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரைலரில் நடிகை சோனா கவர்ச்சியான உடையில் வருவது மாதிரியான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சில மீடியாக்களில் நடிகை சோனா ‘பச்ச மாங்கா’ மலையாள படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்ற செய்திகள் வெளியானது. இது சோனாவிற்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கும் நிலையில் அவர் அந்த படம் குறித்தும் தனது கேர்க்டர் குறித்தும் ஒரு விளக்கத்தை தந்துள்ளார். அதன் விவரம் வருமாறு,

‘‘பச்ச மாங்கா’ படம் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இந்த படம் கனமான ஒரு கதை அமைப்பு கொண்ட படம். அந்த படத்தின் கதையில் கேரளாவில் சில பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அது மாதிரியான உடை அணிந்து நடிக்க வேண்டிய கேரக்டர் எனக்கு! அதனால் ஒரு சில நிமிடங்களே வரும் அந்த காட்சியில் அப்படி நடித்தேன். இதை வைத்து இது கவர்ச்சி படம் என்றும், இந்த படத்தில் சோனா படு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்றும் எழுதி வருகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல! இந்த படத்தை என் உடையை வைத்து கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது மிகச் சிறந்த கதை அமைப்பு கொண்ட ஒரு படமாகும்! என் கதாபாத்திரமும் அப்படியே! இந்த படம் வெளியான பிறகு அது எல்லோருக்கும் புரிந்துவிடும்’’ என்று விளக்கம் தந்துள்ளார் நடிகை சோனா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காட்டேரி ட்ரைலர்


;