இம்மாத இறுதியில் சிம்பு, ஹன்சிகாவின் ‘மஹா’

சிம்பு, ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்குகிறது!

செய்திகள் 23-Jan-2020 11:41 AM IST Top 10 கருத்துக்கள்

சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படம் குறித்த தகவல்களை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்நிலையில் சிம்பு U.R.ஜமீல் இயக்கி வரும் ‘மஹா’ படத்திலும் நடிக்கிறார். ஹன்சிகா முக்கிய கேரக்டரில் நடிக்கும் ‘மஹா’ படத்தில் சிம்பு ஜமீல் என்ற கேரக்டரில் பைலட்டாக நடிக்கிறார். இந்த தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்கும் மதியழகன் படம் குறித்தும், சிம்பு குறித்தும் ஒரு தகவலை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில் ‘மஹா’ படத்தின் இரண்டாம் பாதியின் படப்பிடிப்பு ஜனவரி இருதியில் நடைபெற இருக்கிறது. அன்பு சகோ (சிம்பு), நீங்கள் நடிக்கும் படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி சார்…’ என்று சிம்புவுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பதிவு செய்துள்ளார். இதனால் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளது என்பது தெரிய வருகிறது. ETCETERA ENTERTAINMENT’ நிறுவனம் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் ‘மஹா’விற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

#STR #Hansika #Maha #Vaalu #Ghibran #Bogan #URJameel #Mathiyalagan #EtceteraEntertainment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;