விக்ரமின் ‘கோப்ரா’ முக்கிய தகவல்!

‘கோப்ரா’  படத்தில் இர்ஃபான் பதான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடந்தது!

செய்திகள் 22-Jan-2020 4:12 PM IST Top 10 கருத்துக்கள்

அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘கோப்ரா’. விக்ரமின் 58-வது படமாக உருவாகி வரும் இப்படத்தை லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன் ஸ்டூடியோ’ நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் இர்ஃபான் பதானும் நடிக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் இர்ஃபான் பதான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த தகவலை இயக்குனர் அஜய் ஞானமுத்து, இர்ஃபான் பதானுடன் எடுத்த ஒரு செல்ஃபி படத்தை வெளியிட்டு தெரியப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் கிரிக்கெட் கே.எஸ்.ரவிகுமாரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

#SrinidhiShetty #Vikram58 #AjayGnanamuthu #ARRahman #ChiyaanVikram #IrfanPathan #SevenScreenStudio #Vikram #Cobra #MirnaliniRavi #Anandraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0


;