‘மாஸ்டரு’க்காக தயாராகி வரும் ஆண்ட்ரியா!

‘மாஸ்டர்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருவதாக ஆண்ட்ரியா அறிவிப்பு!

செய்திகள் 22-Jan-2020 3:57 PM IST Top 10 கருத்துக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன் உட்பட பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. ‘மாநகரம்’. ‘கைதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படப்பிடிப்பு வேலைகள் இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையிலேயே இப்படத்தின் பெரும்பாலான ஏரியாக்களின் வியாபாரம் முடிந்துவிட்டது என்பது இப்படத்தின் மீது எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதற்கு உதாரணம்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் ஆண்ட்ரியா ‘மாஸ்டர்’ குறித்து தனது இன்ஸ்டாம் கிராம் பகுதியில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ’இந்த ஆண்டின் மிகப் பெரிய திரைப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியான அனுபவம் என்றும் தற்போது ஃபிப்ரவரியில் நடைபெற இருக்கும் ‘மாஸ்டர்’ இறுதிகட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறேன்’’ என்றும் பதிவு செய்துள்ளார். இதனால் ‘மாஸ்டர்’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் ஃபிப்ரவரி மாதனத்துடன் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேவியர் பிரிட்டோவின் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இரண்டு லுக்குகள் சமீபத்தில் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசை அமைத்து வரும் இந்த படத்தின் ஒளிப்பதிவை சத்யன் சூரியன் கவனித்து வருகிறார். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது விஜய்யின் ‘மாஸ்டர்’.

#Thalapathy64 #Vijay #Anirudh #LokeshKanagaraj #SathyanSooryan #PhilominRaj #SatheeshKumar #StuntSilva #VijaySethupathi #AntonyVarghesePepe #MalavikaMohanan #AndreaJeremiah #Master #VijayAsMaster #ThalapathyAsMaster #SevenScreenStudio #MasterFinalSchedule

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;