தெலுங்கில் ‘நாரப்பா’வாகிய அசுரன்!

‘அசுரன்’ படத்தின்  தெலுங்கு ரீ-மேக் படத்திற்கு  ‘நாரப்பா’ என்று டைட்டில் வைக்கப்படு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!

செய்திகள் 22-Jan-2020 3:54 PM IST Top 10 கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அசுரன்’. ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரித்த இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து, 100 நாட்கள் தொடர்ந்து ஓடி பெரும் வசூலையும் அள்ளியது. இந்த படம் தெலுங்கில் வெங்கடேஷ், ப்ரியாமணி நடிப்பில் ரீ-மேக் ஆகிறது என்றும் தெலுங்கிலும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெங்கடேஷின் ‘சுரேஷ் புரொடக்‌ஷனஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் என்றும் தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் இப்படத்திற்கு ‘நரப்பா’ என்று டைட்டில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ‘நாரப்பா’ டைட்டிலுடன் படத்தில் வெங்கடேஷ் கேரக்டரின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘நாரப்பா’ போஸ்டர்கள் அப்படியே ‘அசுரன்’ பட போஸ்டர்கள் மாதிரியே வெளியாகி உள்ளது.

#Asuran #KalaipuliSThanu #VCreations #VenkateshDaggubati #VenkateshDaggubati74 #Dhanush #SureshBabu #SureshProductions #Naarappa #NaarappaShootBeginsFromToday

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அசுரன் ட்ரைலர்


;