இப்போது அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் ஃபேவரிட் பாடகராக விளங்கி வருபவர் சித் ஸ்ரீராம். தனது வசீகர குரலில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கிய சித் ஸ்ரீராம், மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை சென்னையில் நடைபெற இருக்கும் நிலையில், சித் ஸ்ரீராம் சென்னையில் நேரடியாக இசை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த இருக்கிறார்.
இந்த இசை நிகழ்ச்சி ஃபிப்ரவரி 8-ஆம் தேதி சென்னையிலுள்ள நந்தனம் YMCA மைதானத்தில் மாலையில் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து மூன்று மணிநேரம் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சி ‘ALL LOVE - NO HATE’ என்ற பெயரில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சித் ஸ்ரீராம் தலைமையிலான இசை குழுவினர் நடத்த, இந்த நிகழ்ச்சியில் பல பிரபல பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் நேரடியாக பாட உள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி பாடல்களுடன் ஒரு சில ஆங்கில பாடல்களும் இந்நிகழ்ச்சியில் பாட இருக்கின்றனர். இந்த தகவல்களை சற்றுமுன் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சித் ஸ்ரீராம் தெரிவித்தார்.
இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ‘NOICE AND GRAINS’ என்ற நிறுவனத்தினர் செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தினர் ஏற்கெனவே இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற முன்னணி இசை அமைப்பாளர்களை வைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். சென்னையில் ஏற்கெனவே இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா போன்ற முன்னணி இசை அமைப்பாளர்கள் தலைமையில் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ள நிலையில் இப்போது சித் ஸ்ரீராம் தலைமையிலும் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஆக்ஷன்’. இந்த படத்தை தொடர்ந்து விஷால், மிஷ்கின்...
மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும், ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும்...
‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு இயக்குனர் சீனுராமசாமியும், விஜய்சேதுபதியும் இணைந்துள்ள படம் ‘மாமனிதன்’....