‘சாம்பியன்’ ஹீரோவை இயக்கும் சீனுராமசாமி!

‘மாமனிதன்’ படத்தை தொடர்ந்து ‘சாம்பியன்’ பட ஹீரோ விஷ்வா நடிப்பில் படத்தை  இயக்கும் சீனுராமசாமி!

செய்திகள் 22-Jan-2020 12:46 PM IST Top 10 கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘சாம்பியன்’. இந்த படத்தில் அறிமுகம் விஷ்மா கதையின் நாயகனாக நடித்திருந்தார். நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷின் உறவுக்காரரான விஷ்வா அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘நீர் பறவை’, ‘ தென்மேற்கு பருவக்காற்று’ போன்ற படங்கள் ஜானரில் இப்படம் உருவாக இருக்கிறது என்றும் இந்த படத்தில் விஷ்வா இலங்கை தமிழ் இளைஞராக நடிக்க இருக்கிறார் என்றும், அதற்காக விஷ்வா இலங்கை தமிழ் கற்று வருகிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. முதலில் இந்த கதையை மலையாளத்தின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான ஷைன் நிகாமை வைத்து இயக்க சீனுராமசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால் ஷைன் நிகாம் இப்போது மலையாள படங்களில் மிகவும் பிசியாக இருப்பதால் அவரால் தமிழ் படத்திற்காக தேதிகள் ஒத்துக்க முடியாமல் போகவே அவருக்கு பதிலாக இப்போது விஷ்வா இப்படத்தில் கமிட்டாகியுள்ளார். இயக்குனர் சீனுராமசாமி இப்போது விஜய்சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிசியாக இருக்கிறார். இந்த படம் வேலைகள் முடிவடைந்ததும் தனது அடுத்த பட அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் சீனுராமசமி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேட்டிக்காட்டு வீடியோ பாடல் விஸ்வாசம்


;