அறிமுகம் அஷோக் தியாகராஜன் இயக்கத்தில் அபி சரவணன், வெண்பா இணைந்து நடிக்கும் படம் ‘மாயநதி’. மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜாவின் மகள் பவதாரிணி இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இவ்விழாவில் படக்குழுவினருடன் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர்கள் அமீர், சுப்பிரமணியம் சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவில் படத்தின் இயக்குனர் அஷோக் தியாகராஜன் படம் குறித்து பேசும்போது,
‘‘நம் வாழ்க்கையும் நதிபோல் தான், நம்மால் கணிக்க முடியாத ஒன்று! அதுதான் ‘மாயநதி’ படம். நதி நிறைய திருப்பங்கள் கொண்டது. அது மாதிரிதான் நம் வாழ்க்கையும்! நம் வாழ்க்கையில் நிறைய பக்கங்களை பெண்கள்தான் நிரப்பி வருகிறாரக்ள். இந்த படத்தில் அபிசரவணனும் வெண்பாவும் மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். இந்த விழாவை பொறுத்தவரையில் பவதாரணி மேடம் தான் ஹீரோயின்! அவர் எல்லாப் பாடல்களையும் சிறப்பாக தந்துள்ளார். நான் உட்பட இந்த படக்குழுவினரை பாராட்ட இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி’’ என்றார்.
இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, ‘‘பவதாரிணி இசை பற்றி நான் என்ன சொல்றது? இசை எங்கள் ரத்தத்தில் கலந்தது! இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. என் கையை பிடித்து இசை வாசிக்க வைத்தது அக்கா பவதாரணிதான்! என்னை இந்த அளவிற்கு கூட்டிட்டு வந்தது அவர்தான். அவருக்கும் இப்படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’’ என்றார்.
ஆர்.என்.எம். ராஜி நிலா, ‘முகில் ஃபிலிம்ஸ்’ சார்பில் வழங்கும் ‘மாயநதி’ திரைப்படம் மிக விரைவில் ரிலீசாக இருக்கிறது.
சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப் படமாக...
சசி இயக்கத்தில், சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க உருவாகி வரும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. இந்த...
அறிமுகம் அஷோக் தியாகராஜன் இயக்கி, தயாரிக்கும் படம் ‘மாயநதி’. இந்த படத்தில் ‘பட்டதாரி’, ‘கேரள...