வெற்றிப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் எடுப்பது டிரெண்டாகி உள்ள நிலையில் சுந்தர்.சி.இயக்கத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை-2’ ஆகிய படங்களை தொடர்ந்து அதன் மூன்றாம் பாகத்தை இயக்க இருக்கிறார் சுந்தர்.சி. என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வந்தது. இந்நிலையில் அரண்மனை மூன்றாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா, நடிகைகள் ராஷிகண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் ஆண்ட்ரியா அரண்மனை முதல் பாகத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இப்படத்தில் இயக்குனர் சுந்தர்.சி.யும் ஒரு முக்கிய வேடமேற்று நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் தவிர யோகி பாபு, விவேக் ஆகியோரையும் இப்படத்தில் நடிக்க வைக்க சுந்தர்.சி.திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஃபிப்ரவரி) இறுதியில் அல்லது மார்ச் மாதம் துவக்கத்தில் துவங்க இருக்கிறதாம். இப்படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Aranmanai #Aranmanai2 #Aranmanai3 #Arya #RaashiKhanna #Andrea #SundarC #YogiBabu #Vivekh
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
சென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...
‘மீசையை குமுறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடந்து சுந்தர்.சி.யின் ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனம்...