மீண்டும் இணையும் ‘A1’ கூட்டணி!

‘A1’ படக் கூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கும் படம்!

செய்திகள் 20-Jan-2020 8:09 PM IST Top 10 கருத்துக்கள்

சந்தானம் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான படம் ‘அக்யூஸ்ட் நம்பர் 1’ (A1). ஜான்சன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்போது இதே கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையில் சந்தானம், இயக்குனர் ஜான்சன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘லார்க் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பாக கே.குமார் தயாரிக்கிறார். ‘A1’ படத்தை போலவே இப்படமும் நல்ல நகைச்சுவை விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#Santhanam #A1 #A1AccusedNo1 #MottaRajendran #SanthoshNarayanan #LarkStudios #JohnsonK

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;