பிரசாந்தை இயக்கும் மோகன் ராஜா!

பிரசாந்த் நடிப்பில் ‘அந்தாதூன்’ தமிழ் ரீ-மேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா!

செய்திகள் 20-Jan-2020 8:02 PM IST Top 10 கருத்துக்கள்

ஹிந்தி மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. தேசிய விருதும் கிடைத்த இப்படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தையும், நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியுள்ளார் என்ற தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். ‘அந்தாதூன்’ கதையை பிரசாந்தை நடிக்க வைத்து தயாரிக்க திட்டமிட்டுள்ள தியாகராஜன் படத்தை இயக்குவதற்கான இயக்குனரை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ஹிந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்த படத்தை தமிழில் யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில்‘அந்தாதூன்’ தமிழ் ரீ-மேக்கை இயக்கும் பொறுப்பை தியாகராஜன் இயக்குனர் மோகன் ராஜாவிடம் வழக்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற பல படங்களை தமிழில் ரீ-மேக் செய்து இயக்கி வெற்றி கண்டுள்ளார் மோகன்ராஜா என்பதால் இந்த படத்தை இயக்கும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Andhadhun #NationalAwardForAndhadhun #TopstarPrashanth #Prashanth #AyushmannKhuranna #RadhikaApte #Tabu #StaarMovies #Viacom18MotionPictures #AndhadhunToBeRemadeInTamil #Thiagarajan #MohanRaja #ThaniOruvan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரூஸ் லீ - டீசர்


;