தனுஷ் படத்தில் இணைந்த லட்சுமி பிரியா!

மாரி செல்வராஜ இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் லட்சுமி பிரியாவும் நடிக்கிறார்!

செய்திகள் 20-Jan-2020 7:58 PM IST Top 10 கருத்துக்கள்

‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படமாக இப்போது இயக்கி வரும் படம் ‘கர்ணன்’. கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும், ரஜீஷா விஜயன் கதாநாயகியாகவும் நடிக்க இவர்களுடன் மலையாள நடிகர் லால், யோகி பாபு உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் லட்சுமி பிரியாவும் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மாயா, ரிச்சி, கள்ளப்படம், ஓடு ராஜா ஓடு உட்பட பல படங்களில் நடித்துள்ள லட்சுமி பிரியா நடித்த ‘லட்சுமி’ குறும்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் லட்சுமி பிரியா இப்போது தனுஷின் ‘கர்ணன்’ படத்திலும் இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ தகவலை லட்சுமி பிரியாவே இயக்குனர் மாரி செல்வராஜுடன் இருக்கும் ஒரு புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார். ‘பரியேறு பெருமாள் படத்தை போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை நடராஜன் செய்து வர, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
#Dhanush #Dhanush41 #PariyerumPerumal #MariSelvaraj #SanthoshNarayanan #KalaipuliSThanu #VCreations #Karnan #Lal #RajishaVijayan #LakshmiPriyaaChandramouli

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;