அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆங்கிலத்தில் சுருக்கமாக ‘AAPP’ என்று சொல்லப்பட்டு வரும் இப்படத்தை செஞ்சுரி இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரித்துள்ளார். இப்படம் கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற மாதிரி அட்வெஞ்சர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் ‘அதோ அந்த பறவை போல’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகை அமலாபால் கூறியதவாவது,
‘‘ஒரு இளம் பெண் எந்த உதவியும் இன்றி தனி ஆளாக காட்டில் சிக்கிக்கொள்கிறார். அதிலிருந்து அந்த இளம் பெண் எப்படி தப்பித்து வெளியில் வருகிறார்’ என்பது தான் இப்படத்தி ஒன் லைன் ஸ்டோரி. இன்றைக்கு நாடு இருக்கிற நிலையில் பெண்கள் பாதுகாப்பு என்பது எந்த அளவுக்கு இருக்கிறது என்பது விவாத பொருளாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒட்டுமொத்த பெண்களுக்கும் ஊக்கம் தரும் விதமாக அமைந்துள்ள படம் தான் இது. இந்த படத்துக்காக நான் ‘கிராம்கா’ என்னும் தற்காப்பு கலையை கற்றுக்கொண்டு நடித்துள்ளேன். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூட ஒரு சண்டை போட்டிருக்கிறேன். அந்த சண்டை காட்சி பெரிதாக பேசப்படும். ஷூட்டிங் போவதற்கு முன்னதாகவே எனக்கான சண்டை காட்சிகளை டெமோவாக ஷூட் பண்ணி காண்பித்தார்கள். அதனால் பயிற்சி எடுத்து நம்பிக்கையோடு நடிக்க முடிந்தது. இந்த படத்திற்காக நான் கற்றுக்கொண்ட தற்காப்பு கலை எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப தைரியத்தை கொடுத்துள்ளது. ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள வேண்டும். அது அவர்களது பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும்.
இந்த படத்தை இயக்கியிருக்கும் வினோத், நிர்வாக தயாரிப்பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் இவர்கள் எல்லோரும் இந்த படத்தை எடுத்து முடிக்க பெரிய போராட்டங்களை சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் பட்ட கஷ்டங்கள் முன்னாடி நான் பட்ட கஷ்டம் ஒன்றுமே இல்லை. நான் இதற்கு முன் நடித்து வெளியான ‘ஆடை’ படம் ‘A’ சர்டிஃபிக்கெட்டுடன் வெளியானது. அதனால் அந்த படத்தை குறிப்பிட வயதினர் மட்டுமே பாரக்க முடிந்தது. அனால் இப்படம் ‘U’ சர்டிஃபிக்கெட்டுடன் வெளியாகிறது. அதனால் அனைவரும் இந்த படத்தை பார்க்கலாம். இந்த படம் நிச்சயம் பெண்களுக்கு தன்னம்பிக்கையை தரும் படமாக இருக்கும். இந்த படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. இது போன்று கதை அம்சம் உள்ள படங்களில் நடிக்கவே எனக்கு அதிக விருப்பம்’’ என்றார்!
அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த படத்தில் அமலாபாலுடன் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், குழந்தை நட்சத்திரம் பிரவீன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ஜான் ஆப்ரகாம் செய்ய, கலை இயக்கத்தை சரவணன் கவனித்துள்ளார்.
#AdhoAndhaParavaiPola #AmalaPaul #KRVinoth #CenturyInternationalFilms #AshishVidyarthi #SamirKochhar #JakesBejoy #AdhoAndhaParavaiPolaCensoredWithU #AdhoAdhaParavaiPolaPressMeet
சினிமாவை போல இப்போது வெப் தொடர்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால்...
அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் நடிக்கும் படம் அதோ அந்த பறவை போல. செஞ்சுரி...
‘ஆடை’ படத்திற்கு பிறகு அமலா பால் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. அறிமுக...