ரஷ்யா, அசர்பைஜானில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன்!

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு  அசர்பைஜானில் நடந்து வருகிறது!

செய்திகள் 20-Jan-2020 2:41 PM IST Top 10 கருத்துக்கள்

‘பூமராங்' படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணனும், அதர்வும் இரண்டாவது குறையாக இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி துவங்கிதொடர்ந்து நடந்து வருகிறது. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தை இயக்கி வரும் ஆர்.கண்ணன் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அசர்பைஜான் நாட்டில் படத்தின் இறுதிகட்ட ஷீட்டிங்கில் இருக்கிறோம், வருகிற 23-ஆம் தேதியுடன் படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து விடும் என்றும், இப்படம் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில்…’ என்றும் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டீஸர் முதலானவை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

‘ MKRP புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனத்துடன் இயக்குனர் ஆர்.கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தெலுங்கு ‘கட்டலகொண்டா கணேஷ்’ படத்தின் ரீ-மேக் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரனுடன் ‘விஐபி’ புகழ் அமிதஷ் பிரதான், ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஜெகன்,வித்யுலேகா ராமன், ஆர்.எஸ்.சிவாஜி உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை கபிலன் வைரமுத்து எழுத, ஷம்மி என்கிற சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.கே.செலவா படத்தொகுப்பு செய்ய, சண்டை காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைக்கிறார்.

#AnupamaParameswaran #Atharvaa #RKannan #AmitashPradhan #MKRPProductions #MasalaPixWeb

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;