முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ‘தலைவி’ என்ற பெயரில் ஏ.எல்.விஜய் திரைப்படமாக இயக்குகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடிக்க, எம்.ஜி.ஆர். கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்க இருக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். இப்போது அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கெட்-அப்பில் இருக்கும் புகைப்படங்களை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். நேற்று (ஜனவரி-17) எம்.ஜி.ஆரின் 103-ஆவது பிறந்த நாள்! இதனை முன்னிட்டு அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர். கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜெயலலிதா கேரக்டருக்கு கங்கணா ரணாவத் பொருந்துகிறாரோ இல்லையோ, எம்.ஜி.ஆர் கேரக்டருக்கு அரவிந்த் சாமி அச்சு அசலாக பொருந்தியுள்ளார் என்பது அந்த ஃபர்ஸ்ட் லுக் வெளிப்படுத்தியுள்ளது. தலைவி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும், இணைந்து 25 படங்களுக்கும் மேல் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் அரசியல் குருவும் எம்.ஜி.ஆர்.தான்! அதனால் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவர் எம்.ஜி.ஆர். என்பதால் ஜெயலலிதா பற்றிய ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர்.கேரக்டர் முக்கிய கேரக்டராக இடம் பெறுவதும் அதில் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடிப்பதும் எம்.ஜி.ஆர்.ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
‘தலைவி’ படத்தை விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர்.சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் திரைக்கதையை ‘பாகுபலி’, ‘மணிகர்னிகா’ படம் உட்பட பல வெற்றிப் படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதிய கே.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். ‘தலைவி’ படத்தின் ஒளிப்பதிவு பணியை இதற்கு முன் ஏ.எல்.விஜய் இயக்கிய சில படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த நீரவ்ஷா கவனிக்கிறார். தலைவி ஜூன் மாதம் 26-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Thalaivi #ALVijay #KanganaRanaut #GVPrakashKumar #JayalalithaBiopic #VibriMedia #ALVijay #VishnuVardhanInduri #NirovShah #ArvindSwamyAsMGR #ArvindSwamy #ThalaiviTeaser
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...