‘வானம் கொட்டட்டும்’ படத்தின் புதிய தகவல்!

‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது!

செய்திகள் 14-Jan-2020 12:54 PM IST Top 10 கருத்துக்கள்

மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் படம் ’வானம் கொட்டட்டும்’. இந்த படத்தின் கதை, வசனத்தை மணிரத்னம் எழுத, மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவரும் ‘படை வீரன்’ படத்தை இயக்கியவருமான தனசேகரன் இப்படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, இவருடன் மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மணிரத்னம் தயாரிக்கும் படங்கள் அல்லது இயக்கும் படங்கள் என்றால் அதில் ஒரு தனித்தன்மை இருக்கும். அந்த தனித்தம்னமை ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டீஸரிலும் காண முடிந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை இம்மாதம் 23-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஒளிப்பதிவை ப்ரீத்தா ஜெயராமன் கவனித்திருக்க, ஆண்டனி படத்தொகுபு செய்து வருகிறார். ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டை தொடர்ந்து இப்படம் ஃபிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;