‘அசுரன்’ வெற்றிவிழாவில் மன்னிப்புக் கேட்ட வெற்றிமாறன்!

அசுரன் வெற்றி விழாவில் உதவி இயக்குனர்களிடம் மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன்!

செய்திகள் 14-Jan-2020 12:07 PM IST Top 10 கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ், அம்மு அபிராமி, ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்த படம் ‘அசுரன்’. கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இப்படம் தொடர்ந்து 100 நாட்களை ஓடி சாதனை படைத்த நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா நேற்று சென் னையில் நடைபெற்றது. அவ்விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது,

"ஒரு படம் தயாராகி வெளி வருவதற்குள் நிறைய மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். அதையெல்லாம் தாண்டி இந்தப்படம் 100 நாட்கள் தொடர்ந்து ஓடி இருக்கிறது. ஒரு படம் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும். அதற்கான ஸ்பேஸை மட்டும் நாம் கொடுத்தால் போதும். ஒரு படத்தின் கமர்ஷியல் சக்சஸ் என்பது விபத்துதான். நாம் படத்திற்காக உழைத்தால் மட்டும் போதும். சக்சஸ் தானா வந்து விடும்! இந்தப்படத்தின் கமர்ஷியல் சக்சஸுக்கு பத்திரிகையாளர்கள் பெரும் காரணம். எல்லோரும் நல்லவிதமாக எழுதியிருந்தார்கள். அதற்கு நன்றி!

பொதுவாக எனக்கு ரொம்ப கோபம் வரும். அதையெல்லாம் உதவி இயக்குநர்கள் மீது காட்டுவேன். அதை எல்லாம் பொறுத்துக்கொண்ட அவங்களுக்கு நன்றி. என்னோட இயலாமையைதான் உங்களிடம் கோபமாகக் காட்டுகிறேன். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொளிகிறேன்.

தனுஷ் இந்தப் படத்திற்கு கொடுத்த உழைப்பு அதிகம். சிவசாமி கதாபாத்திரத்தை அவர் பண்ணியதால் தான் இவ்வளவு சிறப்பா வந்தது. ஜி.வி.பிரகாஷ் கொடுத்த எனர்ஜி கமர்ஷியல் சக்சஸுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தாணு சார் எப்போதும் ‘கூலா’க இருப்பவர்! ஒரு தயாரிப்பாளரா அவர் தந்த ஒத்துழைப்பும் ‘அசுரனி’ன் அசுர வெற்றிக்கு பெரிய காரணம்! அனைவருக்கும் நன்றி’’ என்றார்!

#VadaChennai #Vetrimaaran #Dhanush #ManjuWarrier #GVPrakashKumar #Asuran #AsuranSuccessMeet

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;