‘மீசையை முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடந்து சுந்தர்.சி.யின் ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்க, ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நான் சிரித்தால்’. இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடிக்க இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சுஜாதா விஜயகுமார், படவா கோபி, பாண்டியராஜன், முனீஸ்காந்த், ரவிமரியா ஆகியோரும் நடிக்கின்றானர்.
இயக்குனர் ஷங்கரிடம் ‘2.0’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராணா இயக்கும் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக தான் நடிக்கும் படங்களுக்கு தானே இசை அமைக்கும் ஆதிதான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர். இவரது இசையில் அமைந்துள்ள பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வரும் நிலையில் இப்படத்தை காதலர் தினமான ஃபிப்ரவரி 14- ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய இருக்கிற தகவலையும் இப்படக்குழுவினர் சற்றுமுன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். ஆதி நடிக்கும் படம் காதலர் தினத்தன்று வெளியாவது இதுதான் முதல் முறை!
#HHT3 #NaanSirithaal #Raana #SundarC #AvniGroups #HipHopTamizhaAdhi #IswaryaMenon
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
மாறுபட்ட கதைகளை, கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் பரத் அடுத்து நடிக்கும் படம் ‘லாஸ்ட் 6...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....