‘மூக்குத்தி அம்மன்’ - சூப்பர் அப்டேட் தந்த ஆர்.ஜே.பாலாஜி!

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்தது!

செய்திகள் 11-Jan-2020 3:57 PM IST Top 10 கருத்துக்கள்

ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக களம் இறங்கிய படம் ‘எல்.கே.ஜி.’ கே.ஆர்.பிரபு இயக்கிய இப்படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் என்பவருடன் இணைந்து ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தை இயக்கி அதில் ஒரு கேரக்டரில் நடிக்கவும் செய்கிறார். நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தையும் ஆர்.ஜே.பாலாஜியே எழுதியுள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு சமீபத்தில் கன்னியாகுமாரியில் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து 44 நாட்கள் நடத்தி, படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடித்து விட்டதாக ஆர்.ஜே.பாலாஜி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவின் மூலம் கன்னியாகுமாரி மக்களுக்கும், தனது படக்குழுவினருக்கும், ஸ்பெஷலாக நயன்தாராவுக்கும் நன்றி தெரிவித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி ‘மூக்குத்தி அம்மன்’ சம்மர் ரிலீஸாக வெளியாக இருக்கிறது என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்த எல்.கே.ஜி.படத்தை தயாரித்த‘வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனமே இப்படத்தையும் தயாரித்து வருகிறது.

#RJBalaji #Nayanthara #LadySuperstar #NJSaravanan #VelsFilmInternational #IshariKGanesh #MookuthiAmman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;