ஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் 2 படங்கள்!

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘டகால்டி’, ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்கள் ஜனவரி 31-ஆம் தேதி வெளியாக இருக்கிறது!

செய்திகள் 11-Jan-2020 11:04 AM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கரிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் ‘டகால்டி’. இந்த படம் இம்மாதம் 31-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதனை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகி உள்ளது. அந்த படம் ‘சர்வர் சுந்தரம்’. ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திலும் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படத்திற்கு ஏற்கெனவே பல ரிலீஸ் தேதிகள் குறிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதிகளில் இப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிதுள்ளனர். இதனால் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 2 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் படப்பிடிப்பு கோவா, தஞ்சாவூர் மற்றும் துபாயில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவை பிரமோத் கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

#Dagaalty #Santhanam #DirectorVijayAnand #RittikaSen #SanthanaBharathi #Radharavi #Rekha #Manobala #HemanthPandey #StuntSilva #VijayNarain #MadhanKarky #DeepakKumarPadhy #TSSuresh #Jackie #SPChowdhary #18Reels #DagaaltyFromJan31st #ServerSundaram

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;