வெளியானது சந்தானத்தின் ‘டகால்டி’ ரிலீஸ் தேதி!

சந்தானம் நடிக்கும் ‘டகால்டி’ இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 10-Jan-2020 4:48 PM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கரிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் ‘டகால்டி. இந்த படத்தில் சந்தானத்துடன் வங்காள மொழி நடிகை ரித்திகா சென் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக, சந்தானமும், ‘யோகி’ பாபுவும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் என்ற சிறப்பும் ‘டகால்டி’க்கு உண்டு. மற்றும் ராதாரவி, ரேகா, சந்தான பாரதி, மனோபாலா,. நமோ நாராயணா, ‘ஸ்டண்ட்’ சில்வா, பாலிவுட் நடிகர் ஹேமந்த் பாண்டே ஆகியோருடம் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தை இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பின்னணி பாடகர் விஜய் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை தீபக்குமார்பதி கவனித்துள்ளார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்கத்தை ஜாக்கி கவனித்துள்ளார். திருச்செந்தூர், திருநேல்வேலி, காரைக்குடி, சென்னை, அம்பாசமுத்திரம், புனே மும்பை ஆகிய இடங்களில் படமாகியுள்ள ‘டகால்டி’ சந்தானம் ஸ்டலில் ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகி உள்ளது.

#Dagaalty #Santhanam #DirectorVijayAnand #RittikaSen #SanthanaBharathi #Radharavi #Rekha #Manobala #HemanthPandey #StuntSilva #VijayNarain #MadhanKarky #DeepakKumarPadhy #TSSuresh #Jackie #SPChowdhary #18Reels #DagaaltyFromJan31st

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;