’பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருநெல்வேலியில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. ‘வி. கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ’கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுடன் மலையாள நடிகை ரஜீஷா விஜயன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் மலையாள நடிகர் லால், யோகி பாபு உட்பட பலர் நடித்து வருகின்றனர். இப்போது திருநெல்வேலியில் நடந்து வரும் ‘கர்ணன்’ படப்பிடிப்பில் தனுஷுடன் லாலும் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் லால் தனுஷுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கர்ணன், எமன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை வைத்து பார்க்கும்போது இப்படத்தில் தனுஷ் கர்ணன் என்ற டைட்டில் ரோலிலும் எமன் என்ற கேரக்டரில் லாலும் நடிக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. பரியேறு பெருமாள் படத்தை போலவே இப்படமும் கிராமத்து பின்னணியிக் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை நடராஜன் செய்து வர, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
#Dhanush #Dhanush41 #PariyerumPerumal #MariSelvaraj #SanthoshNarayanan #KalaipuliSThanu #VCreations #Karnan #Lal #RajishaVijayan #YogiBabu #LalAsYemen #Yemen
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...