‘யோகி’ பாபு இரட்டை வேடத்தில் நடிக்கும் படம்!

சித்தார்த் கதாநாயகனாக  நடிக்கும் ‘டக்கர்’ படத்தில் ‘யோகி’ பாபு இரட்டை வேடத்தில் நடிக்கிறார்!

செய்திகள் 9-Jan-2020 4:25 PM IST Top 10 கருத்துக்கள்

‘கூர்கா’ படத்தில் கதாநாயகனாக நடித்த காமெடி நடிகர் யோகி பாபு முதன் முதலாக ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அந்த படம் ‘கப்பல்’ படத்தை இயக்கிய கார்த்தி ஜி.கிருஷ் இப்போது இயக்கி வரும் ‘டக்கர். சித்தார்த் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதற்காக அவர் தனது தோற்றம், பாடிலாங்வேஜ், டயலாக் டெலிவரி போன்ற விஷயங்களில் வித்தியாசம் காட்டி நடிக்க பயிற்சி பெற்றுள்ளாராம். இன்று வெளியாகியுள்ள ’தர்பார்’ படத்தில் ரஜினியின் உதவியாளராக நடித்துள்ள ‘யோகி’ பாபு, தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வரும் யோகி பாபு கைவசம் இப்போது பத்துக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கிறதாம்.

#Takkar #ShaitanKaBachcha #Siddharth #Kappal #Majili #DivyanshaKaushik #KarthikGKrish #PassionStudios #NivasKPrasanna #YogiBabu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;