‘வெப் சீரீஸ்’ தயாரிப்பில் களம் இறங்கும் இசை பிரபலங்கள்!

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தயாரிப்பில் எஸ்.பி.பி.சரண் இயக்கும் வெப் சீரீஸ்  ‘அதிகாரம்’

செய்திகள் 8-Jan-2020 2:41 PM IST Top 10 கருத்துக்கள்

தேசிய விருதுபெற்ற ‘ஆரண்யகாண்டம்’ மற்றும் ‘நாணயம்’, ‘சென்னை-600028’, உட்பட பல படங்களை தாயாரித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ‘கேபிடல் ஃபிலிம்ஸ் ஒர்க்ஸ்’ நிறுவனம் இணைய தொடர் தயாரிப்பிலும் களம் இறங்குகிறது. அதிகாரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரை எஸ்.பி.பி.சரண் இயக்குகிறார். இந்த தொடர் மூலம் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், எஸ்.பி.பி.சரணும் இணைய தொடர் தயாரிப்பில் களம் இறங்குகின்றனர். இந்த தொடரின் படப்பிடிப்பு இன்று எஸ்.பி.பி.பாலசுப்பிரமணியம் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்க இனிதே துவங்கியது.

அன்பும் அதிகாரமும் எதிர்மறை விகிதாச்சார இயல்புடையதாக இருக்க, ‘அதிகாரம்’ தொடர் அரசியலை மையமாக கொண்ட ஒரு பரபரப்பான கதைக்களத்துடன் உருவாகிறது. ‘அதிகார’த்தில் இருப்பவர்கள் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்ள ஒரு பக்கம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, அவர்களை வீழ்த்தி அதிகாரத்தை அடைய துடிக்க்ம் சாதாரண இளைஞன் ஒருவனை பற்றிய கதைதானாம் ‘அதிகாரம்’. இந்த தொடரின் கதை, வசனத்தை கேபிள் சங்கர் எழுதியுள்ளார். இத்தொடரில் ‘வெள்ளைப் பூக்கள்’ தேவ், ஏ.எல்.அழகப்பன், இளவரசு, ‘பிக்பாஸ்’ புகழ் அபிராமி, ஜான் விஜய், அரவிந்த் ஆகாஷ், வினோதினி வைத்யநாதன், ‘சூது கவ்வும்’ சிவகுமார், கஜராஜ், ராஜேஷ், வின், வினோ ஆகியோர் நடிக்கின்றனர். இந்த தொடரின் ஒளிப்பதிவை ராஜேஷ் யாதவ் கவனிக்க, தீனா தேவராஜன் இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை ரெமியனும், சண்டை பயிற்சியை ஸ்டண்ட் செல்வாவும் கவனிக்கிறார்கள்.
#SPB #SPBalasubrahmanyam #SPBCharan #CapitalFilmsWorks #Adhigaaram #Webseries #CableShankar #Dev #AbhiramiVenkatachalam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கள் - அருண் பிரபு பேட்டி


;