சூர்யாவின் ‘சூரரைப் போற்று’வில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!

சூர்யாவின்  ‘சூரரைப் போற்று’ படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் Greg Powel பணியாற்றி உள்ளார்!

செய்திகள் 8-Jan-2020 12:46 PM IST Top 10 கருத்துக்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியானது. இந்த டீஸர் மூலம் இப்படத்தில் சூர்யா பல்வேறு தோற்றங்களில் நடித்திருப்பது தெரிய வருகிறது. நேற்று மாலை வெளியான இந்த டீஸர் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் Greg Powell பணியாற்றியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. Fast and Furious 6, Sky Fall, Harry Potter, Hercules, Avengers: Age of Ultron உட்பட பல ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ள Greg Powel சமீபத்தில் வெளியான சிரஞ்சீவியின் ‘சாய்ரே நரசிம்மா ரெட்டி’ படத்திலும் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திலும் இவர் ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றியிருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி கதையின் நாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். சூர்யாவின் ‘2D ENTERTAINMENT’ நிறுவனமும் ‘Sikhya Entertainment’ என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிர்காஷ் குமார் இசை அமைக்கிறார்

#GregPowel #SyeRaaNarasimhaReddy #2DEntertainment #SooraraiPottru #Suriya #SudhaKongara #SikhyaEntertainment #GVPrakashKumar #AparnaBalamurali #Hercules #FastAndFurious6 #AvengersAgeOfUltron #SkyFall

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜாக்பாட் ட்ரைலர்


;