சென்னை G.K.சினிமாஸில் ‘சூரரைப் போற்று’ டீஸர் வெளியீட்டு விழா!

சூர்யா நடிக்கும்  ‘சூரரைப் போற்று’ படத்தின் டீஸர் சென்னையிலுள்ள G.K.சினிமாஸ் திரையரங்கில் வெளியிடப்படுகிறது!

செய்திகள் 7-Jan-2020 12:12 PM IST Top 10 கருத்துக்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி, மோகன் பாபு நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். அதன்படி இன்று மாலை ‘சூரரைப் போற்று’ படத்தின் டீஸ்ர் வெளியாக இருக்கிறது. இந்த டீஸர் வெளியீட்டு விழா, சென்னை போரூரில் உள்ள G.K.சினிமாஸ் திரை அரங்கில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சாரந்த சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள இருக்கிறார்கல். இந்த தகவலை ‘G.K.சினிமாஸ்’ திரையங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் ‘2D ENTERTAINMENT’ நிறுவனமும் ‘Sikhya Entertainment’ என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;