படப்பிடிப்பு நடந்து வரும் நிலையிலேயே சூடு பிடித்த பட வியாபாரம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்   விஜய் நடிக்கும்  ‘மாஸ்டர்’ படத்தின் சர்வதேச விநியோக உரிமையை 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனம் கைபற்றியது!

செய்திகள் 7-Jan-2020 11:58 AM IST Top 10 கருத்துக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது முதலே விறுவிறுப்பான பயணத்தில் உருவாகி வரும் இப்படம் ஏப்ரல மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மாநகரம்’, ‘கைதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் இது என்பதால் இப்படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சர்வதேச விநியோக உரிமையை லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன்ஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படத்தை இந்நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் படப்பிடிப்பு வேலைகளே முடிவடையாத நிலையிலும், பட ரிலீஸுக்கு இன்னும் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இருக்கும் நிலையிலும் ‘மாஸ்டர்’ படத்தின் வியாபாராம் சுடு பிடித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ‘XB FILM CREATORS’ என்ற நிறுவனம் சார்பில் சேவியர் பிரட்டோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஃபிலோமின் ராஜ் கவனிக்கிறார். சண்டை காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைக்க, கலை இயக்கத்தை சதீஷ் குமார் கவனித்து வருகிறார்.

#Thalapathy64 #Vijay #Anirudh #LokeshKanagaraj #SathyanSooryan #PhilominRaj #SatheeshKumar #StuntSilva #VijaySethupathi #AntonyVarghesePepe #MalavikaMohanan #AndreaJeremiah #Master #VijayAsMaster #ThalapathyAsMaster #SevenScreenStudio #LalitKumar #MasterWithSevenScreenStudio

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;