இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ‘டாக்டர்’ சிவகார்த்திகேயன்!

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  துவங்கியது!

செய்திகள் 6-Jan-2020 4:15 PM IST Top 10 கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ ஹீரோ’. இந்த படம் தயாரிப்பில் இருந்து வந்த நேரத்தில்யே ‘ஹீரோ’ படத்தை தயாரிக்கும் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் ‘SK PRODDUCTIONS’ நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறது என்றும் இந்த படத்தை ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார் என்றும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருந்தது. அதே நேரம் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து சென்ற டிசம்பர் 6-ஆம் தேதி ‘டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படப்பிடிப்பு சில நாட்கள் தொடர்ந்து நடந்து முடிந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் ஒரு சில கன்னட, தெலுங்கு படங்களில் நடித்தவரும், ஜே. ராஜேஷ் கண்ணன் இயக்கி வரும் தமிழ் படமான ‘மாயன்’ படத்தில் நடித்து வருபவருமான பிரியங்கா அருள் மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் இப்படத்தில் வினய் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

#SivaKarthikeyan #Doctor #Nelson #KolamaavuKokila #CoCo #KJRStudios #SivakarthikeyanProductions #PriyankaArulMohan #Vinay #JRajeshKannan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மான்ஸ்டர் - டீஸர்


;