முதன் முதலாக தன் வீட்டில் பின்னணி இசை அமைக்கும் இளையராஜா!

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்திற்கான பின்னணி இசையை தன் வீட்டில் செய்து வருகிறார் இளையராஜா!

செய்திகள் 6-Jan-2020 4:06 PM IST Top 10 கருத்துக்கள்

விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்கள் ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’ மற்றும் ‘காக்கி’. இதில் பாபு யோகேஸ்வரன் இயக்கி வரும் ‘தமிழரசன்’ படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த இப்படத்தின் பின்னணி இசை கோர்ப்பு வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கான பின்னணி இசை கோர்ப்பு வேலைகளை இளையராஜா தன் வீட்டில் செய்து வருகிறார் என்ற தகவலை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இசைத்துறையில் இத்தனை ஆண்டுகாலமாக பணியாற்றி வரும் இளையராஜா தனது வீட்டில் ஒரு படத்திற்கு இசை கோர்ப்பு வேலை செய்வது இதுதான் முதல் முறையாம். அந்த பெருமை விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்திற்கு கிடைத்துள்ளது. ‘எஸ்.என்.எஸ்.மூவீஸ்’ நிறுவனம் சார்பில் கௌசல்யா ராணி தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, ராதாரவி, சோனு சூட், யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உட்பட பலர் நடிக்கின்றனர். ‘தமிழரசன்’ விரைவில் வெளியாக இருக்கிறது.

#Ilaiyaraaja #Thamilarasan #VijayAntony #RemyaNambeesan #PranavMohanRaja #SangeethaKrish #BabuYogeeswaran #Siva #SNSMovies #Isaignani

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;