சிம்புவின் ‘மாநாடு’வில் இணைந்த இசை பிரபலம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும்   ‘மாநாடு’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்!

செய்திகள் 6-Jan-2020 11:25 AM IST Top 10 கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படம் குறித்த புதிய அதிகாரபூர்வ தகவல்களை பொங்கல் அன்று வெளியிட இருப்பதாக இப்படத்தை தயாரிக்கும் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அறிவித்திருந்தார். பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ‘மாநாடு’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமக்க இருப்பது உறுதியாகி உள்ளது. இது குறித்த ஒரு பதிவை யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபுவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார். ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு ஃபிப்ரவரி மாதம் முதல் வாரம் துவங்க இருக்கிறது என்று கூறப்படுகிறது. ‘மாநாடு’ படம் குறித்து முதலில் அறிவிப்பு வெளியான நேரத்தில் இப்படத்தில் கல்யாணி பிரியதர்சன் சிம்புவுடன் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அதற்கு பிறகு இப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ‘மாநாடு’ படம் இப்போது மீண்டும் உயிர் பெற்று, உருவாக இருக்கும் நிலையில் இப்படத்தில் சிம்புவுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவல் பொங்கலன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Simbu #KalyaniPriyadarshan #VenkatPrabhu #STR #Maanadu #U1 #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;