‘மஹா’வில் சிம்புவின் கேரக்டர் என்ன தெரியுமா?

ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்தில் சிம்பு பைலட்டாக நடிக்கிறார்!

செய்திகள் 4-Jan-2020 1:54 PM IST VRC கருத்துக்கள்

ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாகநடிக்கும் படம் ‘மஹா’. U.R.ஜமீல் இயக்கும் இந்த படத்தில் சிம்புவும் நடிக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவின் தோற்றத்துடன் கூடிய இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து படத்தின் இயக்குன ஜமீல் சிம்பு கேரக்டர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

‘‘எல்லோரும் ‘மஹா’ படத்தில் சிம்பு ஒரு சிறிய கேரக்டரில் தோன்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. அவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்றாலும் அவரது கதாபாத்திரம் கதையில் மிக முக்கியமானது. படத்தில் அவரது கதாபாத்திரம் ஃப்ளாஷ் பேக் காட்சிகளாக 45 நிமிடங்கள் வரும். சிம்பு இப்படத்தில் பைலட்டாக நடிக்கிறார். அவரது கதாபாத்திர பெயர் ஜமீல். என்னுடைய பெயரை அவரது கதாபாத்திரத்துக்கு வைத்து விளம்பரம் தேடுவதாக நினைக்க வேண்டாம். முதலில் சாஹிப் என்றுதான் பெயர் வைத்திருந்தோம். ஆனால் அந்த பெயர் மிகவும் வழக்கமான பெயராக இருப்பதாக படக்குழுவினர் கருதியதால் இந்த பெயரை முடிவு செய்தோம்‘’ என்று விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் ஜமீல்.

‘ETCETERA ENTERTAINMENT’ நிறுவனம் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் ‘மஹா’விற்கு ஜிப்ரான் இசை அமைத்து வருகிறார். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

#STR #Hansika #Maha #Vaalu #Ghibran #Bogan #URJameel #Mathiyazhagan #EtceteraEntertainment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;