பிழை – விமர்சனம்

படிப்பில் நாட்டம் இல்லாதவர்களை  திருத்தும் ‘பிழை’

விமர்சனம் 3-Jan-2020 3:34 PM IST Top10Cinema கருத்துக்கள்

PRODUCTION : TURNING POINT PRODUCTIONS

DIRECTION : RAJAVEL KRISHNA

CAST : CHARLI, ‘MIME‘ GOPI, GEORGE MARIYAM, ‘KAKKAA MUTTAI’ RAMESH, NASAD, GOKUL

MUSIC : F.S.FIZAL

CINEMATOGRAPHY : BAKKI

EDITOR : RAMGOPI

அறிமுக இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் மரியம், ‘காக்கா முட்டை’ ரமேஷ், நசாத், கோகுல் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வெளியாகியுள்ள ‘பிழை’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

சார்லி, ‘மைம்’ கோபி, மரியம் ஜார்ஜ் ஆகிய மூவரும் கல் உடைக்கும் தொழில் செய்து வருபவர்கள்! தாங்கள் கஷ்டப்படுவது மாதிரி தங்களது பிள்ளைகள் வாழ்க்கையில் கஷ்டப்படக் கூடாது என்றும், அவர்கள் மூலம் தங்களது வறுமை நிலையை போக்கவும் நினைத்து மூவரும் தங்களது பிள்ளைகளை ( ‘காக்கா’ முட்டை ரமேஷ், நசாத், கோகுல்) கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். ஆனால் பிள்ளைகளோ பள்ளிக்கு ஒழுங்காக செல்லாமலும், குறும்புத்தனங்கள் செய்தும் பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். ஒரு கட்டத்தில் தங்களது வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவனை கிணற்றுக்குள் தள்ளி விடுகிறார்கள். பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று ஊர்காரர்கள் சண்டைக்கு வருகிறாகள். இதனால் ஆத்திரப்படும் சார்லி, மைம் கோபி, மரியம் ஜார்ஜ் ஆகியோர் தங்களது பிள்ளைகளை அடிக்க, மூவரும் கோபித்துக்கொண்டு சென்னைக்கு ஓடி விடுகிறாகள். சென்னைக்கு வந்த மூன்று சிறுவர்களும் எதிர்பாராத விதமாக சில சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார்கள்! அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே ‘பிழை’யின் மீதி கதை!

படம் பற்றிய அலசல்

கிராமத்தில் வாழ்ந்து வரும் மூன்று தந்தைகளையும் அவர்களின் மகன்களையும் பற்றிய கதை! தங்கள் வாழ்க்கையில் படும் கஷ்டங்கள் மாதிரி தங்களது பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்று அவர்களை படிக்க வைக்கும் தந்தைகளின் கனவு, ஆனால் அந்த தந்தைகளின் கனவையோ, வலிகளையோ பற்றி தெரியாமல் விளையாட்டுத்தனமாக இருக்கும் மூன்று சிறுவர்களின் போக்கை, வீட்டை விட்டு சிட்டிக்கு ஓடி வருபவர்கள் எப்படிப்பட்ட சிக்கல்களில் எல்லாம் மாட்டிகொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதையும் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளதன் மூலம் கவனம் பெறுகிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா! படத்தின் ஆரம்பம் முதல் பிள்ளைகள் சென்னைக்கு ஓடிவருவது வரையிலான காட்சிகள் கொஞ்சம் நாடகத்தன்மையுடன் பயணித்தாலும், அதன் பிறகான காட்சிகளை விறுவிறுப்பாக்கி ரசிக்க வைக்கிறார் ராஜவேல் கிருஷ்ணா! இது போன்று ஒரு சில குறைகள் படத்தில் இருந்தாலும் படிப்பு விஷயத்தில் கவனம் செலுத்தாத பிள்ளைகளுக்கு கல்வியின் அவசியத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லியமைக்காகவும் , வீட்டை விட்டு பட்டணத்திற்கு ஓடி வரும் பிள்ளைகள் எவ்வாறான பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரும் என்பதை சிறப்பாக சொல்லியமைக்காககவும் ‘பிழை’யை வரவேற்கலாம். F.S.ஃபைசலின் இசை சொல்லும்படியாக அமையவில்லை. ஒளிப்பதிவு செய்துள்ள பாக்கி, படத்தொகுப்பு செய்துள்ள ராம்கோபி ஆகியோரின் பங்களிப்பு குறை சொல்ல முடியாத அளவிற்கு அமைந்து ‘பிழை’க்கு பலம் சேர்த்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

மகன் கணாமல் போனதும் தவியாய் தவிக்கும் சார்லியின் நடிப்பாகட்டும், தன் மகன் தன்னுடன் இருந்தால் போதும் அவனுக்கு படிப்பு பிடிக்கவில்லை என்றால் கூட பராவாயில்லை வாழ்க்கை பூறாவும் நானே சோறு போடுகிறேன் என்று கூறியவாறே கண்கலங்கும் ‘மைம்’ கோபியாகட்டும், காணாமல் போன மகனை தேடி அலைந்தும், அவனை நினைத்து கண்கலங்கியும் தவியா தவிக்கும் மரியம் ஜார்ஜாகட்டும் பிள்ளைகளை இழந்த தந்தைகளின் வேதனைகளை, உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி நடித்துள்ளனர். இவர்களது பிள்ளைகளாக வரும் ‘காக்கா முட்டை’ ரமேஷ், நசாத், கோகுல் ஆகியோரின் குறும்புத்தனங்கள் ரசிக்க வைப்பதோடு அனைவரது நடிப்பும் கச்சிதமாக அமைந்துள்ளது. இவர்களுடன் படத்தில் வரும் ஏனைய கேரக்டர்களில் நடித்திருப்பவர்களும் தங்களது கேரக்டர்களுக்கு ஏற்ற சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.சொல்ல வந்த கருத்தும், விறுவிறுப்பாக பயணிக்கும் இரண்டாம் பாதியும்

2.சார்லி, ‘ மைம்’ கோபி, ஜார்ஜ மரியம் ஆகியோரின் பங்களிப்பு

பலவீனம்

1.நாடகத்தன்மையுடன் பயணிக்கும் முதல் பாதி

2.இசை

மொத்தத்தில்…

சமூக அக்கறையோடும், படிப்பில் நாட்டம் இல்லாத மாணவர்களுக்கு பாடம் சொல்லும் விதமாகவும் எடுக்கப்பட்டுள்ள இப்படம் மாணவ மாணவிகளிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்!

ஒருவரி பஞ்ச் : படிப்பில் நாட்டம் இல்லாதவர்களை திருத்தும் ‘பிழை’

ரேட்டிங் : 4/10

#Pizhai #PizhaiMovieReview #Charlie #MimeGopi #GeorgeMariyan #TurningPointProductions #RajavelKrishna #Bakki

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சார்லின் சாப்ளின் 2 சின்ன மச்சான்


;