‘பூவரசம் பீப்பி’ படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘சிலுக்கருப்பட்டி’. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படத்திற்கு பல்வேறு திரையுலக பிரமுகர்களின் பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றது. இயக்குனர் ஷங்கர் இப்படம் குறித்து பாராட்டு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ‘‘சில்லுக்கருப்பட்டி’ அழகான அர்த்தமுள்ள க்யூட்டான ஸ்வீட்டான புத்துணர்வான படம். மறக்க முடியாத கவிதை! இயக்குனர் ஹலீதா ஷமீம் சிறப்பாக இயக்கியுள்ளார். இந்த படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்’’ என்று அந்த பதிவு அமைந்துள்ளது.
சில்லுக்கருப்பட்டி படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், பேபி ராசா, அர்ஜுன், ‘காலா’ மணிகண்டன், நிவேதிதா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நான்கு கதைகளாக உருவாகி உள்ள இப்படத்தில் ஒரு கதையை அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, இன்னொரு கதையை மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். மற்ற இரண்டு கதைகளை யாமினி யக்னமூர்த்தி, விஜய் கார்த்திக் கண்ணன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ‘டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரதீப் குமார் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் ‘2D ENTERTAINMENT’ நிறுவனம் வாங்கி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
#2DEntertainment #Suriya #DirectorShankar #RajSekarPandian #SilluKaruppatti #Halitha #DivineProductions #Samuthirakani #Sunaina #SaraArjun #LeelaSamson #Sathish #Nivedhitaa #PradeepKumar
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...