‘டைட்டில் லுக்’கிலேயே அதிரடி காட்டிய ‘பொன்னியின் செல்வன்’

மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டது!

செய்திகள் 3-Jan-2020 1:11 PM IST VRC கருத்துக்கள்

மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்டில் பாங்காங்கில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு, ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், ஜெயராம், பிரபு, லால், அஸ்வின் காக்குமனு, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம் உட்பட பலர் நடித்து வருகின்றனர். அத்துடன் மேலும் பல நடிகர்கள், நடிகைகள் இப்படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் மணிரத்னம் இயக்கும் படங்கள் என்றால் அப்படங்களின் டைட்டில், டைட்டில் லுக், ஃபர்ஸ்ட் லுக் போன்றவற்றை பட வேலைகள் நிறைவடையும் தருணத்தில் தான் வெளியிடுவார்! ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே மணிரத்னம் படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டு அசத்தியுள்:ளார். அட்டகாசமான ஸ்டைலில் உருவாகியுள்ள இந்த டைட்டில் லுக் இப்போது சமுகவலைதளங்களில் வைரலாகி வருவதோடு படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

‘லைகா புரொடக்‌ஷன்’ஸும் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை ரவிவர்மன் கவனிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையை மணிரத்னமும், குமரவேலும் எழுத, ஜெயமோகன் வசனங்கள் எழுதுகிறார். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார். தயாரிப்பு உருவாக்கத்தை தோட்டாதரணியும், வாசிக் கானும் இணைந்து கவனிக்கிறார்கள். சண்டை பயிற்சியை ஷாம் கௌஷல் அளிக்கிறார். ஆடை வடிவமைப்பை ஏகா லக்கானி கவனிக்கிறார். நடனங்களை பிருந்தா அமைக்கிறார். ‘பொன்னியின் செல்வனி’ன் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக நாம் காத்திருப்போம்!

#PonniyinSelvan #Karthi #ManiRatnam #Vikram #JayamRavi #AishwaryaRaiBachchan #AishwaryaLekshmi #Lal #LycaProductions #MadrasTalkies #RaviVarman #SreekarPrasad #ARRahman #PonniyinSelvanLogo #PonniyinSelvanTitleFont

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;