பொங்கலுக்கு முன்னதாகவே வெளியாகும் சூர்யா பட டீஸர்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் டீஸர் இம்மாதம் 7-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 2-Jan-2020 3:03 PM IST Top 10 கருத்துக்கள்

‘இறுதிச்சுற்று’ படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் படம் ‘சூரரை போற்று’. சூர்யாவின் 38-வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க, பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் செகன்ட் லுக் சூர்யா ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்டாக நேற்று வெளியிடப்பட்டது. இந்த செகண்ட் லுக்கில் இப்படத்தின் டீஸர் 7-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. முதலில் இப்படத்தின் டீஸர் பொங்கலுக்கு வெளியாகும் என்று சமீபத்தில் சென்னையில் நடந்த ‘தம்பி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ‘சூரரைப் போற்று’ படத்தை தயாரிக்கும் ‘2D ENTERTAINMENT’ நிறுவனத்தின் CEO ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று வெளியான ‘சூரரைப் போற்று’ செகண்ட் லுக் போஸ்டர் வாயிலாக ‘சூரரைப் போற்று’ டீஸர் பொங்கலுக்கு முன்னதாக இம்மாதம் 7-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சூர்யாவின் ‘2D ENTERTAINMENT’ நிறுவனமும் ‘Sikhya Entertainment’ என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;