அறிமுகம் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் 'கட்டில்'. இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
'மேப்பிள் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களை பதிவு செய்திருக்கிறோம் என்று படக்குழுவின்ர் தெரிவித்துள்ளனர்.
'மர்ம தேச'த்தின் மூலம் உலக தமிழர்களால் அறியப்பட்ட பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் கதாநாயகனுக்கு அண்ணனாக நடிக்கிறார். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம் உட்பட பல பிரபலங்கள் 'கட்டில்' மூலமாக நடிகராக அறிமுகமாகிறார்கள்.
பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றிருக்கும் 'கட்டில்' படத்தின் ஒளிப்பதிவை வைட் ஆங்கிள் ரவிசங்கரன் செய்கிறார்.
இ.வி.கணேஷ் பாபு இயக்கி வரும் படம் ‘கட்டில்’. மேப்பில் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த...
‘பல்லாட் கொக்காட் ஃபிலிம் ஹவுஸ்’ நிறுவனம் சார்பில் மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன்...
வடிவுடையான் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடிக்க, நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் கதாநாயகிகளாக...