‘2.0’ படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கி வரும் படம் ‘இந்தியன்-2’. கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல்ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு, சமுத்திரகனி, மனோபாலா, விவேக் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கடந்த நவம்பர் மாதம் 7-ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் தாத்தா வேடத்தில் இருப்பது மாதிரியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. அதைப் போல இப்போது இயக்குனர் ஷங்கர் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கமல்ஹாசன் இந்தியன் தாத்தா கெட்-அப்பில் இருப்பது மாதிரியான ஒரு புதிய போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனிருத் இசை அமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வரும் ‘இந்தியன்-2’ திரைப்படம் 2021 தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#KamalHaasan #KajalAggarwal #DirectorShankar #Indian2 #Indian #NedumuniVenu
#AnirudhRavichander
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...
தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடன இயக்குனராக விளங்கி வருபவர் பிருந்தா. இவர் ஒரு படத்தின் மூலம்...