‘விஸ்வாசம்’ பட நிறுவனத்திற்காக ‘ஈட்டி’, ‘ஐங்கரன்’ பட இயக்குனர் இயக்கும் படம்!

ரவி அரசு இயக்க, ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் கன்னட படம்!

செய்திகள் 2-Jan-2020 10:55 AM IST Top 10 கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘பட்டாஸ்’. துரை செந்தில்குமார் இயக்கி வரும் இந்த படத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிரசிதா உட்பட பலர் நடிக்க, இப்படம் இம்மாதம் 16-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்துடன் ‘ராட்சசன்’ படப் புகழ் ராம்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தை தயாரிக்கிறது ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம். இந்நிலையில் இந்நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படம் கன்னட மொழியில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷிவ்ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்க, இப்படத்தை ‘ஈட்டி’, ‘ஐங்கரன்’ ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். இந்த படத்தின் மற்ற அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;