ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சத்தமில்லாமல் உருவான படம்!

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்து மாதவி, தர்ஷனா நடிக்கும் படம்!

செய்திகள் 31-Dec-2019 12:15 PM IST Top 10 கருத்துக்கள்

விஜய்சேதுப்தி நடிப்பில் ‘புரியாத புதிர்’, ஹரீஷ் கல்யாண் நடிப்பில் ‘இஸ்பேட் ரஜாவும் இதயராணியும்’ ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி சத்தமில்லாமல் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை THIRD EYE ENTERTAINMENT என்ற நிறுவனம் தயாரிக்க, இந்த படத்தில் பிந்து மாதவி, தர்ஷனா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது,

‘இன்னும் பெயரிடப்படாத இப்படம் இரண்டு சகோதரிகள் பற்றிய கதை. அந்த இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பதியப்பட்ட நிலத்தை விற்க சொந்த ஊருக்கு பயண்மாகிறார்கள். அந்த பயணத்தில் அவர்கள் பல சிக்கல்களை, பிரச்சனைகளை சந்திக்கிறார்ல்கள். அந்த பிரச்சனைகளை அவர்கள் எப்படி சந்திக்கிறார்கள் என்பது தான் படத்தின் கதைக்களம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் கடும் பனிப்பொழிவு இருந்த நேரத்தில் 30 நாட்கள் தொடர்ந்து நடத்தினோம். இந்த படத்திற்கு கவின்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடந்த இப்படத்தின் போஸ்ட் புரொக்‌ஷன் வேலைகள் இப்போது நடந்து வருகிறது. இப்படம் குறித்த மற்ற தகவல்களை விரைவில் வெளியிட இருக்கிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கழுகு 2 - டீஸர்


;